தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

வளிமண்டல சுழற்சி  காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மிக கனமழை:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி  காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது இந்நிலையில், தொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தேனி, ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மிதமான மழை:

நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  இடியுடன் கூடிய  மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

கர்நாடகா, கேரளா, வட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பவத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பழநிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதனால் வருகின்ற இன்று முதல் வருகின்ற 27-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.