பெண் ஐடி ஊழியர் கடத்தி கொலை! காஞ்சீபுரம் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என தாவிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

சென்னையை அடுத்த சிறுசேரியில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐடி ஊழியர் உமாமகேஸ்வரி கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாகஉத்தம் மண்டல்,  ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பிலிருந்து மேல் முடிவு செய்யப்பட்டிருந்தது.,

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏற்கனவே கிழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஆகியவற்றில் முழுக்க விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அதனை மேற்கோள் காட்டி மீண்டும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.