தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை – சென்னை உயர்நீதிமன்றம்!

தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை – சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக் கோரி வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடுப்பூசி முகாம் நடத்தும் பொழுது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து தடுப்பூசி முகாமுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மனநலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைவில் செலுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
author avatar
Rebekal
Join our channel google news Youtube