கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேங்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்-டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி..!

கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேங்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம்-டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி..!

டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. கொசுக்கள்  வளரும் வகையில் தண்ணீர் தேக்கம் இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொசுக்கள் வளரும் விதமாக தண்ணீர் தேங்கி இடங்களை கண்டால் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அபராதம் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும். அதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், இந்த அபராதம் வீடுகளுக்கு ரூ.200 வரையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.15,000 வரையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைகளுக்கு ரூ.5,000 வரையும், சாப்பாட்டு உணவகங்களுக்கு ரூ.25,000 வரையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Join our channel google news Youtube