வெற்றியை துரத்தும் சென்னை..விரக்தியை வீழ்த்தத்துடிக்கும் கொல்கத்தா..இன்று பலபரீட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலபரீட்சை நடத்துகிறது.

அபுதாபியில் நடைபெறும் இன்றைய போட்டியில் தோனி தலைமையில் சென்னை அணியும்,திணேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் களமிரங்குகிறது.சென்னை அணி இதுவரை 5 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.அதே போல் கொல்கத்தா 4 ஆட்டங்களில் 2 வெற்றி ஈட்டியுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி அதில் சென்னை 13 போட்டியிலும்,கொல்கத்தா 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.ஒரு போட்டியில் முடிவு தெரியவில்லை.சென்னை முந்தைய போட்டியில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது அதே போல் கடைசி போட்டியில் .கொல்கத்தா போராடி தோல்வி கண்டது.

இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றி காண்போம் 🙂

ஹாட்ரிக் தோல்விக்கு பின் ஒரு அசத்தல் வெற்றியை பெற்ற சென்னை உத்வேகத்துடன் களமிறங்கும்,அந்த அணியில் தொடக்க வீரர் வாட்சன், நல்ல நிலையில் உள்ளார்.அதே போல டூபிளசி நம்பிக்கையாக திகழ்கிறார்.
அம்பத்தி ராயுடு,தோனி ஆகியோர் பேட்டிங்கில் அணிக்கு தூண்களாக இருப்பது பலமே.ஆல்ரவுண்டர் ஜடஜா மற்றும் சாம் ஜோடி மிடில் வரிசையில் பலத்தை சேர்கின்றனர்.பந்து வீச்சில் பிராவோ,தீபக், ஆகியோரின் பந்துக்கள் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்து தருகிறது.ஆனால் சர்துல்,பியுஷ்,விக்கெட் எடுத்தாலும் ரன்களை தாரளமாக அளிக்கின்றனர்.என்பது பலவீனமே,கேதார் ஜாதவின் பின்னடைவு அணிக்கு சற்று சறுக்கலே இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இளம்வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பளிப்பாரா? தோனி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அணி போராடி கடந்த போட்டியில் தோற்றதால் சற்று விரக்தியில் உள்ளது. கொல்கத்தா அணியில் பேட்டிங்க் பொறுத்தவரையில் கில்,ரானா,மார்கன்,திரிபாதி போன்றோர் நல்ல ஃபர்மில் உள்ளனர்.கேப்டன் திணேஷ் கார்த்திக்,சுனில் நரைனின் பின்னடைவான ஆட்டம் அணிக்கு பலவீனமே,ஆல்ரவுண்டர் ரசல் தற்போது வரை தனது அதிரடியை ஆட்டத்தில்  காண்பிக்காதாது அணிக்கு பலவீனம் தான்,பந்து வீச்சில் இளம் வீரர்களான மாவி,நகர்கோட்டி ஆகியோர் மிளிர்கின்றனர்.அனுபவ வீரர் பேட் கம்மின்ஸ்-ன் கவனக்குறைவு பந்துவீச்சுக்கு பலத்தை குறைக்கிறது.
இந்நிலையில் வெற்றியை தொடர சென்னை அணியும்,விரக்கிதியிலிருந்து மீள கொல்கத்தாவும் பலபரீட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



author avatar
kavitha