இந்த மொபைல் ‘ஆப்’ இருந்தால் போதும்! இனி சென்னையில் பார்க்கிங் நெரிசல் தொல்லையே கிடையாது!

  • சென்னையில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடும், அதன் பார்க்கிங் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த புதிய மொபைல் ஆப் வெளியாகியுள்ளது. 
  • இந்த ஆப்பை பயன்படுத்தி பார்க்கிங் செய்தால் இருசக்கர வாகனத்திற்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மக்கள் தொகை நெரிசலும் அதிகரித்துள்ளது. அதே போல, சென்னையில் வாகன பயன்படும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனால் ஆங்காங்கே பார்க்கிங் பிரச்சனை உள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி புதிய யோசனையை அறிமுகப்படுத்த உள்ளது.

சென்னை மாநகராட்சி பார்க்கிங்கிற்காக புதிய மொபைல் ஆப்பான GCC SMART PARKING என்கிற ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், சென்னையில் 5,532 பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சென்னையில் உள்ள பாண்டிபஜார், புரசைவாக்கம், அண்ணா நகர் ஆகிய ஏரியாக்களில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயையும் வசூலிக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணத்தை ஆன்லைனில் கூகுள் பே, பேடிஎம், க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை மூலம் பணம் செலுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.