ஆட்சியர் நேரடி பார்வையில் சாத்தன்குளம் காவல் நிலையம்-உயர்நீதிமன்றம் அதிரடி!

நிதித்துறை நடுவரை காவலர்  ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த

By kavitha | Published: Jun 30, 2020 09:43 AM

நிதித்துறை நடுவரை காவலர்  ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில்  வசைப்பாடிய அநாகரீக செயலானது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் விசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை  வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன்  மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  இம்மரணம் தொடர்பான விசாரணையை கடந்த திங்கள்கிழமையில்  நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக  மதுரைகிளை நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் இருந்து பறந்து உள்ளது ஒரு புகார். நீதித்துறை நடுவரிடம் இருந்து வந்த புகார் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி கூறுகையில்: உயர் நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதித்ததுறை நடுவர் விசாரணை நடத்தியபோது கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் வீடியோ எடுத்ததாகவும், தேவையான ஆவணங்களை தராமல் வழக்கு தொடர்பாக அவர்கள் ஒத்துழைக்க வில்லை என்று அதில் சுட்டிக்காட்டியதாகவும்  மகாராஜன் என்ற காவலர் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா போன்ற தடித்த வார்த்தைகளில் நீதித்துறை நடுவரை திட்டியதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய உத்தரவிடுவதாகவும் உடனடியாக மூவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டதாக குறிப்பிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இன்று ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதியை தடித்த வார்த்தைகளால் திட்டிய காவலர் மகாராஜனை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை நடைபெறும் சூழ்நிலையில்  வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்ட நீதிபதிகள்; வட்டாசியர் செந்தூர் ராஜ் என்பவரை பொறுப்பாளராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.மேலும் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc