வேலூரில் அத்தியாவசிய தேவைகளின் கடைகள் திறப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டில் மாற்றம் – வேலூர் மாவட்ட ஆட்சியர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பல கடைகள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
அந்த வகையில் வேலூரில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறுகையில், மளிகை கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இறைச்சி கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவையான பால் கடைகளை மட்டும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். இதுதவிர காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.