TDP supporters

ChandrababuNaidu: சந்திரபாபு நாயுடு கைது.! தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டம்.!

By

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைதராபாத்தில் உள்ள கேபிஆர் பூங்காவில் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உருவ பொம்மையையும் அவர்கள் எரித்தனர்.

தொடர்ந்து, விசாகப்பட்டினம் பெட்டகடிலி பிஆர்டிஎஸ் சாலையிலும் கட்சி ஆதரவாளர்கள், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியிலும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்ற்னர்.

Dinasuvadu Media @2023