SETC Bus

Chandrababu Naidu: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…! ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தம்..!

By

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கு தேச கட்சியினர்திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்ற்னர்.

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் 155 பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரம்பாக்கம், ஊத்துக்கோட்டை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Dinasuvadu Media @2023