,
Puducherry WeatherUpdate

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

By

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை அலர்ட் 

வெப்ப சலனம் காரணமாக இன்று புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

வெயில் அலர்ட் 

இன்று (2) -ஆம் தேதி முதல் வரும் 4-ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்களேன்- வெளியே வராதீங்க….! அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்துக்கு வெயில் அலர்ட்….

மீனவர்களுக்கான எச்சரிக்கை 

  • இன்று முதல் 6 -ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
  • இன்று கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.