தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். அந்த வகையில் தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர் திருவள்ளூர், தேனி, கன்னியாகுமரி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும், மேலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட நிலை நிலவும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.