30 C
Chennai
Thursday, July 29, 2021

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்


54
/ 100


  • சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவாருர், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை , ஈரோடு,சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Latest news

Related news