29 C
Chennai
Saturday, April 17, 2021

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் திருச்சி,புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் செய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Latest news

Related news