29 C
Chennai
Sunday, October 24, 2021

#BREAKING: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை, மதுரையில் நாளைக்கு  கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More