தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கு தீபகற்ப பகுதிகளில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும், எனவே அடுத்த 5 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வடகிழக்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு தேவையான நீராதாரங்களை வழங்கும். அதிலும், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கும், டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களுக்கும், தெற்கு ஆந்திர பகுதிகளுக்கும் தேவையான நீராதாரங்களை இந்த வடகிழக்கு பருவமழை வழங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.