"சக்ரா" டிரைலர் மிரட்டலான சாதனை.!

விஷால் நடித்துள்ள  சக்ரா படத்தின் டிரைலர் 4 மொழிகளில் வெளியாகி 5

By ragi | Published: Jul 01, 2020 01:27 PM

விஷால் நடித்துள்ள  சக்ரா படத்தின் டிரைலர் 4 மொழிகளில் வெளியாகி 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று 'சக்ரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.

அண்மையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர் புரோமோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது கடந்த சனிக்கிழமை இந்த படத்தின்  மிரட்டலான டிரைலரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. இந்த நிலையில் தற்போது 4மொழிகளில் வெளியான அந்த டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது. அதனை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc