இந்தியாவில் சீனா முதலீடா??

இந்தியா- சீன ஆகிய இரு நாட்டு  ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள்

By kavitha | Published: Jul 07, 2020 09:04 AM

இந்தியா- சீன ஆகிய இரு நாட்டு  ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதும் கொதிக்க வைத்தது.மேலும் இந்திய  எல்லைப் பகுதியை  பதற்றமானதாக  மாற்றியது சீனா இதன் காரணமாக அந்நாட்டு மீதும் அந்நாட்டு பொருட்கள் மீதும் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் சீனாவை சேர்ந்த, 59 மொபைல் செயலிகளுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்தது மட்டுமின்றி இந்தியர்கள் புதிய செயலிகளை உருவாக்க வாய்ப்பையும்,இதற்கு பரிசுத்தொகை என்ற ஊக்கத்தொகையாக  ரூ.20 லட்சத்தை அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய  முன்வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் கடந்த ஏப்ரல் மாதம், முதலீடு செய்வதற்கான விதிமுறைகள்  அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அண்டை நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் மிக அவசியமாகும். புதிய அல்லது கூடுதல் நிதி முதலீடுகளுக்கும், இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தெரிவித்த அவர் இந்தியாவில் முதலீடு செய்ய, சீன நிறுவனங்கள்  50 முதலீட்டு பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது. முதலீடு தொடர்பாக சீன நிறுவனங்கள் முன்வைத்தாலும் இந்திய - சீனா இடையிலான பிரச்னையால், இப்பரிந்துரைகள்  அனைத்தும் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பரிசீலிப்பது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் இவ்விஷயத்தில் மிக கவனமாக  செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc