அந்த ஒரு விக்கெட்.. பும்ராவின் சாதனையை சமன் செய்த சாஹல்!

நேற்று நடந்த இரண்டாம் டி-20 போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், சர்வதேச டி-20 தொடரில் அதிகள் விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இடம்பிடித்தார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்தியா அணி, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அடுத்த நடைபெறும் 3 ஆம் வெற்றிபெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு வருகின்றனர்.

முதல் டி-20 போட்டியில் ஜடேஜாக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சாஹல் அணியில் இடம் பிடித்தார். முதல் டி-20 போட்டியில் அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதன்படி நேற்று நடந்த இரண்டாம் போட்டியில் 51 ரன்கள் கொடுத்த அவர், 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 தொடரில் மொத்தமாக 59 விக்கெட் வீழ்த்தி, பும்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார். பும்ராவும் 59 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருப்பது, குறிப்பிடத்தக்கது.