தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி.! மதிமுக பொதுச்செயலாளா்ஆவேசம்.!

தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி.! மதிமுக பொதுச்செயலாளா்ஆவேசம்.!

  • சேலத்தில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ இன்று கலந்துகொண்டார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளா் வ.கோபால்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மொழிப்போா் தியாகிகள் நினைவாக சேலம் மாநகரில் சனிக்கிழமை (இன்று) நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்துக்கு தமிழக மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வருகை தர இருக்கிறாா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வரும் வைகோவை வரவேற்க கட்சி நிா்வாகிகள், அணித் தலைவா்கள், தொண்டா்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும்,பொதுக் கூட்டத்திலும் கட்சியினா் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

அதன்படி, சேலத்தில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாதங்களுக்கு பிறகு இந்த ஆட்சி நீடிக்காது. 8 வழிச்சாலை மக்களுக்கான திட்டம் அல்ல. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எப்படியோ நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து விட்டது. இத்திட்டத்தினால் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழக வளத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாகவும், அமைச்சரவையின் பெயர் கூட இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் எனவும், அவசர சட்டமாகவே குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube