கொரோனா பாதிப்பு தீடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை!

கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு செயலர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை இந்தியாவில் மட்டும் 150,793 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

அதிலும் இந்தியாவின் சில மாநிலங்களில் தீடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது. 

இந்த 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார திட்ட இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் நேற்று காணொலி காட்சி உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆரோக்கியா சேது செயலியின் நன்மைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

எளிதில் தாக்கும்படியுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தனி கவனம் செலுத்தும்படி பேசப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற நோயாளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் கூறியுள்ளார். 

author avatar
Rebekal