கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் – ராகுல் காந்தி!

கொரோனா தடுப்பூசியே மக்களுக்கு இலவசமாக செலுத்துவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும்  வழக்கப்படுத்திக் கொண்டாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

எனவே, மக்கள் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 21.85 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனாவை வெல்வதற்கான வலுவான ஆயுதம் தடுப்பூசி எனவும் இந்திய மக்களுக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் இலவச தடுப்பூசிக்காக  குரலெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், #SpeakUpForFreeUniversalVaccination எனும் ஹேஸ்டேக்கில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal