இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பை ஒழிக்க பார்க்கிறது மத்திய அரசு – ராகுல் காந்தி கண்டனம்

அரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று ராகுல் காந்தி விமர்சனம்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்கப்படுகிறது. ரசின் சொத்துக்களை குத்தைகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது.

நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள், உணவு தானிய கிடங்குகள் தனியாருக்கு விற்க பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர் மோடி.

42,000 கி.மீ தூர வழித்தடங்களை தனியாருக்கு பிரதமர் மோடி தாரைவார்க்க உள்ளதாகவும், 70 ஆண்டாக உருவாக்கப்பட்ட அரசு சொத்துக்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொருளாதார நிர்வாகம் சரியில்லாத அவல நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு என்பதை முழுவதுமாக ஒழிக்க பார்க்கிறது மத்திய பாஜக அரசு எனவும் குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்