தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பதிலளிக்காத மத்திய அரசு – சொந்த செலவில் தடுப்பூசிகளை வாங்க தீர்மானித்துள்ள கேரள அரசு!

கேரளாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில், இதுவரை பதில் அளிக்காததால் கேரளா தனது சொந்த செலவில் தடுப்பூசிகளை வாங்க தீர்மானித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் தடுப்பூசிகள், மருத்துவமனையில் படுக்கை வசதி மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இன்றி மிகவும் திணறிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று கேரளாவிலும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் இதுகுறித்து மத்திய அரசில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில், கேரளாவில் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் மாநிலத்துக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும்படி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தாலும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை எனவும், அதனால் கேரளா தனது சொந்த செலவில் தடுப்பூசிகளை வாங்க தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal