மோசடி அழைப்புகளுக்கு செக்.! வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு.!

மோசடி அழைப்புகளில் ஈடுபட்டுள்ள கணக்குகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீப நாட்களாக, இந்திய மக்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து மோசடி அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதாவது, சர்வதேச எண்களிலிருந்து இந்திய மக்களிடம் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன .எனவே, இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

WhatsApp Scam
WhatsApp Scam File Image

இதனால், மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள். தற்போது, இதுபோன்ற சர்வதேச எண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, மோசடி செயல்களில் ஈடுபடும் கணக்குகளை தடை செய்யுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

WhatsApp Users
WhatsApp Users Image source mysmartprice
புகார்:

குறிப்பாக, எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

Whatsapp Spam Call
Whatsapp Spam Call ImageSource Twittermashable
36 லட்சம் கணக்குகள் தடை:

இந்நிலையில், இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாதி இணையதளத்தை அறிமுகப்படுத்திய போது, இந்தியாவில் 36 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மோசடி செயல்களில் ஈடுபடும் கணக்குகளை தடை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Whatsapp spam
Whatsapp spam Image Source Gizbot
மக்கள் கவனத்திற்கு:

வாட்ஸ்அப்களில் ஒரு சர்வதேச எண்ணிலிருந்து அழைப்பு வந்ததால், அந்த அழைப்பைச் செய்பவர் வேறு நாட்டில் இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை நினைவில் கொள்ள்ளுங்கள். நீங்கள் இருக்கும் அதே ஊரில் இருந்தும் வாட்ஸ்அப் வழியாக சர்வதேச எண்ணிலிருந்து அழைக்கலாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.