#Breaking: வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கோவாக்சின், கோவிஷில்டு என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. மேலும், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், தற்பொழுது வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தவகையில், தடுப்பூசி செலுத்தும் முதல் 100 பேரை 7 நாட்களுக்கு கண்காணித்து, மருந்தின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.