கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களின் காப்பீட்டு திட்டம் நீட்டிப்பு..!

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களின் காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றைக் கட்டுபடுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் கொரோனா நிவாரணப் பணிகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து,பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா பரவலுக்கு எதிராகப் போராடி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான இந்த காப்பீட்டு திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது கொரோனா  இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளதால் இந்த காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.