2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு-மத்திய அரசு தகவல்

ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு மக்கள் தொகை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் .இந்தியா  நாடு முழுவதும் 2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் வீடு, வீடாக கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.