வாக்குப்பதிவு மையங்களில் செல்போனுக்கு தடை… 23,500 போலீசார் பாதுகாப்பு – காவல் ஆணையர்

வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 23,500 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரை முடிந்த பின் வெளியாட்கள் யாரும் இருக்கக்கூடாது என்றும் அப்படி இருந்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். சென்னையில் 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 10 மையங்கள் மிகவும் பதற்றமானவை என தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு மையங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதித்துள்ளார்.

மதுபானங்கள் விற்பனை, கடத்தலை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை போலீஸ் சார்பில் செல்போன் செயலி என்றும் சமூக வலைத்தளங்களில் விதிகளை மீறி பரப்புரை செய்தால் சைபர் பிரிவு கண்காணிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்