கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர்!

கடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால்,

By leena | Published: Mar 28, 2020 08:00 AM

கடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிரிந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும், 600-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து, இந்த கொரோனா தடுப்பு பணிக்காக, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், கொரோனா தடுப்பு பணிக்காக, ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்கியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc