திடீர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகரின் உயிர் பிரிந்தது!

நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில்

By leena | Published: Apr 30, 2020 09:55 AM

நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நடிகர் ரிஷி கபூர் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை நடிப்பில் வெளியான, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த பின் குணமடைந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை நடிகை வரலக்ஷ்மி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோய் காரணத்தால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc