விருமன் ஸ்டார்ட்.! பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.!!

நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் “விருமன்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கர் மகள்  அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கான அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாலா, இயக்குனர் முத்தையா, சூர்யா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, சிவகுமார், ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் கலந்துகொண்டனர். அதற்கான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.