CBSE பொதுத்தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்.. 97.67 சதவீத மாணவர்கள் பாஸ்!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் மாநிலம் வாரியாக சதவீதம் அடிப்படையில் பாஸ் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மாணவர்கள் cbseresults.nic.in எனும் வலைத்தளத்தில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதன் படி (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.78% ஆக உள்ளது. கடந்த ஆண்டு 2019-ல் 83.78 % இருந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் முதல் மூன்று இடத்தில திருவனந்தபுரம் 97.67% ஆகவும் பெங்களூரரில் 97.05%ஆகவும் சென்னையில் 96.17% ஆகவும் உள்ளது. இதில் பெண்கள் 92.15%, ஆண்கள் 86.19%,மூன்றாம் பாலினத்தவர்கள் 66.67% ஆகவும் உள்ளது. இதில் பெண்கள் ஆண்களை விட 5.96 சதவீதம் அதிகமாக உள்ளார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.