தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்நோலினின் தாயாரிடம் சிபிஐ விசாரணை…!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்நோலினின் தாயாரிடம் சிபிஐ விசாரணை…!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்நோலினின் தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முழுப் பின்னணி விவரங்களை விரிவாக விசாரித்து தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதோடு, விசாரணையை 4 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Related image

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, கொலை மிரட்டல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் நேற்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த இன்ஸ் பெக்டர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.இந்நிலையில் இன்று 2ஆம் நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் சேகரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இதன் பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்நோலினின் தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *