மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் C.B.I உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.அதில் கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ்குமாரை சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் நேற்று ஆஜரானார். இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்பு ராஜீவ் குமார் ஆஜராகினார். அப்போது, அவரிடம் சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு ஆவணங்களை அழித்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here