தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ

  • CBI |
  • Edited by venu |
  • 2020-09-26 16:57:45

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில்  சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கினை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதலில்  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை சிபிஐ விசாரித்தது.விசாரணைக்கு பின்னர் காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.இரண்டாவதாக கைது செய்யப்பட்ட  வெயிலுமுத்து , சாமதுரை, செல்லதுரை ஆகியோரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது . இதனையடுத்து 3  காவலர்களும்  சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கொரோனா காரணமாக  காவலர் பால்துரை உயிரிழந்தார். ஒரு சில சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில்இந்த வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட  காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Latest Posts

#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!
கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!