தீவிர விசாரணை.! சாத்தான்குளம் காவல்நிலையம் ,ஜெயராஜ் கடை முன்பு சிபிசிஐடி விசாரணை.!

ஜெயராஜ் கடை முன்பு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By murugan | Published: Jul 01, 2020 12:29 PM

ஜெயராஜ் கடை முன்பு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறையில் உயிரிழந்த நிலையில் இவர்கள் இருவரும் காவலர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

உயிரிழந்த தந்தை மகன் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கையை கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தந்தை, மகன் மரணம் தொடர்பாக 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சென்று ஜெயராஜ் வீடு, கடை மற்றும்  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ் கடையில் விசாரணை நடத்தியபோது கடைத்தெருவில் உள்ள வியாபாரிகள் தாங்களாக முன்வந்து நடந்த சம்பவத்தை சிபிசிஐடி-யிடம்  விவரித்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc