• இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர்.
  • இன்று தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்றி  அரசாணை வெளியிட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிற்குள்ளாகியது. கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, வசந்த குமார், சபரி ராஜன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இம்மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள் இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர்.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.

அதற்கு ஏற்றாற்போல், இன்று தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்றி  அரசாணை வெளியிட்டது.

முதற்கட்டமாக சின்னப்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் இன்று சிபிசிஐடி சோதனையை நடத்தியது.