• கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை  கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
  • முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
  • கோவை சிபிசிஐடி போலீசார் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க  பேஸ்புக் ,வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் கோவை சிபிசிஐடி போலீசார் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவமால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.