ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு.!

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய  தங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு கிரீடங்கள், அம்புகள் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்த அகழ்வாய்வில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகழ்வாராய்ச்சி குழு அறிவித்துள்ளது.

#BREAKING: தாக்கலானது மின்சார சட்டத்திருத்த மசோதா.. நிலைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு!

ELECTRICITY

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல். 

மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.  மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் என கூறப்படுகிறது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தபட்சம், அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவரப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கியம் அம்சம் என்பது குறிப்பிடப்படுகிறது.  மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்ப்புகளை தெரிவித்தனர். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரியம் மத்திய அரசின் ஆணையத்தின் கீழ் செல்லும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானங்கள் உள்ளது.? சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானம் , உடற்பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன – உயர்நீதிமன்றம் கேள்வி. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ/ மாணவிகளுக்கு முறையான உடற்பயிற்சி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது, இது குறித்த விசாரணையில் இன்று கருத்து கூறிய உய்ரநீதிமன்றம், முதலில் தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானம் , உடற்பயிற்சி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன, என கேள்வி எழுப்பியது? இது குறித்து, அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

court,OPS

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோரின் மனு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். அதன்படி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரி ஓ பி எஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை புதன்கிழமை 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் வரவுள்ளதால் ஒத்திவைக்குமாறு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன்.

அரசியல் பற்றி விவாதித்தோம்.. ஆனால் அதனை செய்ய மாட்டேன்.! ஆளுநர் சந்திப்பு.. ரஜினிகாந்த் பேட்டி.!

தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் இன்று  சந்தித்தார். அதன் பின்னர் அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சென்னை , கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதாவது உள்ளே அரசியல் பற்றி விவத்தீர்களா என கேட்டதற்கு விவாதித்தோம். இப்போது எதுவும் கூற முடியாது எனரஜினி கூறினார். அதேபோல, அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு , இல்லை நான் அரசியலுக்கு வர மாட்டேன் என தெரிவித்தார்.  பால் பொருட்கள் ஜி.எஸ்.டி பற்றி கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் என கருத்து கூற மறுத்துவிட்டார்.

இறுதியாக , ஜெயிலர் படம் எப்போது தொடங்கும் என கேட்டபோது, இம்மாதம் 15 அல்லது 22ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்து விட்டு சென்றுவிட்ட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆக்கிரமிப்பு வழக்கு – விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

sc,hc

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை.

சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இருந்த நிலையில், இதனை விசாரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.? 608.. 503… தமிழகத்துக்கு வெறும் 33 கோடி.!

மத்திய அரசு, மாநிலங்களில் விளையாட்டு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 33 மாநிலங்களுக்கு மொத்தமாக 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரபிரதேசதிற்க்கு 503.02 கோடியும், குஜராத்திற்கு 608.37 கோடியும், அருணாச்சல பிரதேசம் 183.72 கோடியும், கர்நாடகாவுக்கு 128.52 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 110.80 கோடியும், ஹரியானாவுக்கு 88.89 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 85.64 கோடியும், மணிப்பூருக்கு 80.45 கோடியும், பீகாருக்கு 50.83 கோடியும்,

அசாமுக்கு 47.68 கோடியும், திரிபுராவுக்கு 38.35 கோடியும், ஹிமாச்சல பிரதேசதிற்கு 38.10 கோடியும், உத்தரகாண்ட்டிற்கு 23.78 கோடியும், கோவாவுக்கு 19.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.

ஏனைய மற்ற மாநிலங்களான தமிழகத்திற்கு 33.00 கோடியும், புதுச்சேரிக்கு 16.02 கோடியும், கேரளாவுக்கு 62.74 கோடியும், ஆந்திராவுக்கு 33.80 கோடியும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 7.23 கோடியும், சத்தீஸ்கருக்கு 20.65 கோடியும், டெல்லிக்கு 89.36 கோடியும், ஜம்மு காஷ்மீருக்கு 27.89 கோடியும், ஜார்கண்ட்டிற்கு 10.38 கோடியும், லடாக்கிற்கும் 14.28 கோடியும், லட்சத்தீவுவுக்கு 9.00 கோடியும்,

மேகாலயாவுக்கு 28.00 கோடியும், மிசோரமுக்கு 39.00 கோடியும், நாகாலாந்திற்கு 45.00 கோடியும், ஒடிசாவுக்கு 28.00 கோடியும் பஞ்சாப்பிற்கு 93.71 கோடியும், ராஜஸ்தானுக்கு 112.26 கோடியும், சிக்கிமுக்கு 25.83 கோடியும், தெலுங்கானாவுக்கு 24.11 கோடியும், மேற்கு வங்காளதிற்கு 26.77 கோடியும் என மொத்தமாக 27,54.28 கோடி ரூபாய் நிதி விளையாட்டு துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

#JustNow: புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை!

புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை என அறிவிப்பு.

மொகரம் பண்டிகையையொட்டி நாளை புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறைக்கு பதில், வரும் 20-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

muharram2022

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி – செல்லூர் ராஜூ

sellurraju

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றம் என செல்லூர் ராஜூ விமர்சனம்.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , 2024 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விடியா அரசு தடுமாற்றத்தில் உள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறை சோதனைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சுகிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றாத விடியா அரசுக்கு கண்டனம் என்றும் கூறியுள்ளார்.

இறுதி போட்டிக்கும் மகளிர் கிரிக்கெட்டிற்கும் ராசி இல்லை.. 3 முறை 2ஆம் இடம்.!

2017 ஒருநாள்  உலகக்கோப்பை தொடர், 2020 டி 20 உலகக்கோப்பை தொடர், தற்பட்டது 2022 காமன்வெல்த் இறுதி போட்டி இந்த 3 தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை இழந்துள்ளளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றுடன் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளளது. இதில் இந்திய அணி நல்ல எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகிறது.

இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்றது. அதில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது.  கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்  தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் லானிங் தலைமையில், போட்டியிட்டது டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஆனால், இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் காமன் வெல்த் 2022இல் இறுதி போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றது.

இதே போல இதற்கு முன்னர் 2 முறை இறுதி போட்டிக்கு வந்து தோற்கடிக்கப்பட்டு, இரண்டாம் இடத்துடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது.  2017ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதி இதே போல 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டது.

2020 டி 20 உலக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியுடன் மோதி 85 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.