சேலத்தில் சுகாதார வளாகம் குப்பை கிடங்கானது வாலிபர் சங்கத்தினர் போராட்டம்…!

சேலம் மாநகர் செல்லக்குட்டிகாடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நவீன சுகாதார வளாகம் உள்ளது.இங்கு பெயரில் மட்டும்தான் சுகாதாரம் உள்ளதே தவிர இந்த பகுதிகளில் சுகாதாரம் அரவே இல்லை. 1.மழைபோல் குப்பைகள் தேக்கம். 2.பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லை. 3.அங்காங்கே கழிவுநீர்,மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சரிசெய்ய பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி_ஊழியர்களோ_அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. எனவே டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள மாநகராட்சியை கண்டித்து இன்று 7.10.17 காலை 9.30மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் … Read more

அதிக கட்டணம் வசூலித்த பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் கைது….!

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பாடம் நடத்துவதாக கூறி அதற்காக அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். ஆனால், சிபிஎஸ்இக்கான அங்கீகாரம் அரசிடம் பெறவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது.இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்வி துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிபிஎஸ்இக்கு வசூலித்த … Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 என கிடுகிடு உயர்வு…!

சென்னை : தங்கம் விலையில் இன்று (அக்.,07) மீண்டும் மீண்டும் ஏற்றத்துடனே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 ம், கிராமுக்கு ரூ.20 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2821 ஆகவும், 10 கிராம் (24 காரட்) ரூ.30,170 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,568 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.42.50 ஆக உள்ளது.

சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: எம்.எல்.ஏ. தனியரசு

திருப்பூர்: சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என காங்கேயம் எம்.எல்.ஏ.வும் கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் 3 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்தித்து பிரிந்த அணிகளை இணைக்க வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார். மேலும் பாஜகவின் பிடியில் இருந்தும், அச்சுறுத்தல்களில் இருந்தும் அதிமுக அணிகள் விடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குளோபல் மருத்துவமனையில் கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா

சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனை, வி.கே. சசிகலா இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று மாலை சாலை வழியாக சென்னை வந்து சேர்ந்தார். இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு பெரும்பாக்கம் வந்த சசிகலா, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை … Read more

சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பே இல்லை : மைத்ரேயன் எம்.பி.

சென்னை : சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் கணவரின் உடல் நலம் போன்ற காரணத்திற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது என்றார். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அடுத்த வெள்ளியன்று தினகரன் தரப்பில் வாதம் நடைபெறலாம் என்றும் அவர் கூறினார். 

குடிநீர் வீணாகி போகுது…. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறா போகுது…..!

 விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கினார் பகுதியில் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அனைத்தும் ரோட்டில் வீணாக ஆறு போன்று ஓடுகிறது.  தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் கவனத்திற்கும்,மாவட்ட அலுவலர்கள் கவனத்திற்கு வந்தும் எந்த ஒரு நடவடிக்கை இல்லை என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்த மக்கள்…. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா….?

கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது. கேரள இடது … Read more

பூடானில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் 7 தங்கம்,2 வெள்ளி,1 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்….!

தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய  international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார், S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed … Read more

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகையை குறைக்கும் மத்தியஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

ஈரோடு மாவட்டத்தில் தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்து வழங்க முடிவு செய்துள்ள மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,விசிக,பகுஜன் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆகியோர் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தார்கள்…