முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிபிஐ அதிகாரியை பணியிட மாற்றம் செய்த விவகாரத்தில் முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை விவகாரம்:சீராய்வு மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு உட்பட பல்வேறு தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது விசாரணை தொடங்கியது.பெண் நீதிபதி இந்துமல்கோத்ரா அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மனுக்களை விசாரிக்கிறது. shortnews

2வது நாளாக ர்ணாவில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

சிபிஐ விவகாரத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.  

மத்திய பட்ஜெட் 2019 :இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்!!

நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. shortnews

மத்திய பட்ஜெட் 2019: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. shortnews

தமிழக அரசின் அரசாணையை ரத்து!!சென்னை உயர்நீதிமன்றம்

50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். SHORTNEWS

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது . தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார்.

10% இடஒதுக்கீடு:திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு

போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. ஏற்கனவே 400க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 600க்கும் மேற்பட்டோரை இடைநீக்கம் செய்ய...