இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்பு தங்கத்தை ராமநாதபுரம் பார்த்திபனூரில் பேருந்தில் எடுத்துச் சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் கடத்திவரப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழக மீனவர் கேரளாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் .ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சீதாங்குண்டம் பகுதியை சேர்ந்த மீனவர் அந்தோணி உயிரிழந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி அருகே திடீரென ஏற்பட்ட நில வெடிப்பு காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மரத்தடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்று காலை முதல் நிலத்தில் பல இடங்களில் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் அருகாமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓ.என்.ஜி.சி குழாய்கள் பதிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது புதிதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் இயற்கை எரிவாயு இருக்கிறதா என்று சோதனை […]
ராமநாதபுரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போரட்டம் திரும்பப் பெறப்பட்டது. மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடிக்கச் செல்வதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் காந்தியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் நகராட்ச்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராமநாதபுரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கச்சத்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை கைதான தமிழக மீனவர்கள் 15 பேரையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார். பார் கவுன்சிலில் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். சத்தியஸ்ரீ தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா(36) வழக்கறிஞராக பதிவு செய்தார்.
மூன்றாவது நாளாக ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பால பகுதியில் பலத்த காற்று வீசியதால், ரயில் போக்குவரத்தில் மட்டும் தேக்க நிலை காணப்பட்டது. பாம்பன் பகுதியில் 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ மீட்டர் வரையில், மூன்றாவது நாளாக பலத்த காற்று வீசியது. இதனால் பாம்பன் ரயில் பாலத்தில், மூன்றாவது நாளாக பகலில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மாலையில் காற்று ஓய்ந்த பின்னரே, இரவு வாக்கில், சென்னை, கோயம்புத்தூர், வாரணாசி செல்லும் விரைவு ரயில்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் […]
இரண்டாவது நாளாக பலத்த காற்று காரணமாக, ராமேஸ்வரம் பாம்பல் பாலத்தில் ரயில் போக்குவரத்து பல மணி தடைபட்டதால், பயணிகள், ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கடும் அவதிக்கு ஆளகினர். ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில், மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 63 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசியது. இதனால் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் அங்கிருந்து மறுமார்க்கத்தில் இயக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5 […]
டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி அறிவித்திட வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ராஜா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். எஸ்சி,எஸ்டி. பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், மின்வாரிய தொழிலாளர் […]
பலத்த சூறாவாளி காற்றுடன் ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 20அடி உயரத்திற்கு ராட்ச அலை எழுகின்றது. மேலும் சூறைக்காற்று பலமாக வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் மணல் மூடிக் காணப்படுகின்றது. தனுஷ்கோடி கம்பிபாடு வரை மட்டுமே செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் தடுப்புவேலி அமைத்து சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. […]
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய வாலிபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் கனி. தொழிலாளியாகப் பணி புரிந்து வருகிறார். ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் கனி. சில தினங்களாக சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த […]
கருணாஸ் தனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக அவர் மனு கொடுத்தால் அதனை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தன் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாத இந்த பதவி தேவைதானா என்று சட்டமன்றத்தில் கூட கூறிவிட்டேன். ஆனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினரான எனக்கு யாருடைய ஆதரவும் இதுவரை இல்லை. இதுவரை எனது தொகுதி மக்களுக்கான தேவைகளுக்காக 159 மனுக்கள் கொடுத்துள்ளேன். 3 மனுக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது எந்த […]
ராமஸே்வரம் : பாம்பன் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். ஆழ்கடலுக்குள் சென்ற 51 படகுகளில் 27 படகுகள் பல்வேறு கடற்கரை பகுதிகளில் கரை திரும்பின. எஞ்சியுள்ள 24 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தகவல்
பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கடலுக்குள் குதிக்கும் வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ ஓன்று வெளியிடுவதற்காக, இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் மேலிருந்து கடலுக்குள் குதித்துள்ளார். பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவற்றில் நின்றுகொண்டிருக்கும் அந்த இளைஞர் சக இளைஞர்கள் உற்சாகப்படுத்த, எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் ஆபத்தான முறையில் கடலுக்குள் குதித்துள்ளார். ஏற்கனவே ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் செல்பி […]