இந்த வருடம் ஆடி அமாவாசை வருகிற புதன் கிழமை வரவுள்ளது. வருடாவருடம் இந்நாளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களை வணங்கும் பொருட்டு, ராமேஸ்வரதிற்கு வந்து வழிபட்டு செல்வர். அங்கு மக்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் 31 ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் அதே போல ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு அதே நாளில் மலை 4.15 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப் மற்றும் மின் சாதன பொருட்களை மட்டும் திருடும் வினோதமான திருடர்கள் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் மற்றும் இதர பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் அவர்களை தனிப்படை அமைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கடேசன், மஹேந்திரன் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்தது.
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது காமராஜபுரம். இங்கு மீனவர்கள் மற்றும் பணை தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். கடந்த பாத்து ஆண்டுகளுக்கு முன், சாலை அமைத்து தருவதாக கூறி வந்தனர். இந்நிலையில் ரூ19லட்சத்தி 50ஆயிரம் நிதி ஒடுக்கப்பட்டது. இந்நிலையில், 2017-18 ஆம் டார் சாலை அமைத்ததாக கூறி அங்கு அறிவிப்பு பலகை வைக்க பட்டது. இது அங்குள்ள மக்களீடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வடிவேல் நகைச்சுவை போல, கிணறு வெட்டிய ரசீது கையில் இருக்கிறது. அனால் கிணற்றை காண […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள்.இவர் கணவர் முடியாண்டி.மகன் பாண்டிமற்றும் மருமகள் மலருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்துள்ளனர். அவரின் மகன் பாண்டி,ரயிலில் இருந்து கீழே விழுந்ததால் கால்களை இழந்துள்ளார்.பாண்டிக்கும் மலருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் மாமனார் முனியாண்டி அவ்வப்போது மருமகள் மலரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இதனை அறிந்த பாண்டியம்மாள் அவரை கண்டித்துள்ளார்.ஆனால் அவர் கேட்குமாறு இல்லை. தொடர்ந்து அந்த பெண் மலருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் […]
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ள ஏராந்துரை கிரமாம் உள்ளது.இந்த கிரமாத்தை சேர்ந்த தம்பதிகளான பாண்டி மற்றும் சக்தி அவர். பாண்டியின் மனைவி சக்திக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அங்கே இல்லததால் செவிலியர்களிடையே பரிசோதித்த சக்திக்கு சிப்ரோஃப்ளக்சின் (Ciproflaoxacin) என்ற தமிழக முத்திரையிடப்பட்ட மாத்திரையை அவரிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட பின்னர் வீட்டிற்கு சென்ற சக்தி மாத்திரையை உட்கொள்ள முயன்ற போது […]
மதுரையிலி இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலை தண்டவாளத்தில் பைக்கை குறுக்கே நிறுத்தி ரயிலை மறித்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று காலை பயணிகள் ரயில் மதுரையிலிலுருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சிலைமானை அடுத்த மேம்பாலத்தை தண்டி சென்றபோது, ஒரு போதை வாலிபர் தனது இருசக்கர வாகனத்தால் தண்டவாளத்தை கடக்க நினைக்கையில் இடையில் மாட்டிக்கொண்டார். இதனை கவனித்த இன்ஜின் ட்ரைவர் சுதாரித்து கொண்டு ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியருடன் சேர்ந்து வாகனத்தை தண்டவாளத்திலிருந்து […]
பெரும்பாலான ஊர்களில் கோடை காலம் வந்தால்தான் தண்ணீரின் அருமை தெரிகிறது. தண்ணீர் சிக்கனம் அளவாக பயன்படுத்த கூறுகிறோம். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தண்ணீருக்கு கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருத்தேர்வலசை கிராம மக்கள். இவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஐந்தாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நீர்த்தேக்க தொட்டிஇருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. இதனால் தினம் தினம் மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் காவிரி குடிநீர் திட்ட […]
ராமநாதபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் சக காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு அதிக அளவில் விறகு ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தை காவலர்கள் கை காட்டி நிறுத்த கூறினார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனால் டாட்டா ஏசி வாகனத்தை விரட்டி பிடித்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த் டாட்டா ஏசி வாகனத்தின் ஓட்டுனர் கண்ணனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே […]
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.நாளை தமிழகத்தில் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தில் ஒரே பெயரை கொண்ட 100 பேர்கள் உள்ளதால் தேர்தல் வரும் போது தேர்தல் அதிகாரிகள் ஓவ்வொரு முறையும் குழப்பம் […]
பாகிஸ்தானிடமிருந்து இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் வைக்கப்பட்ட பேனரில் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் மிராஜ் […]
ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது முனியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 4 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த படகிலிருந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.இந்நிலையில் இதனை கண்ட சக மீனவர்கள் 4 பேரையும் மீட்டு பத்திரமாக கொண்டு […]
இராமநாதபுரத்தில் உள்ள கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இவர்களின் மீனை விற்பனை செய்வதற்காக இங்கு மீன் ஏலக்கூடம் இல்லாததால், சாலைகளில் வைத்து மீன்களை ஏலம் விட்டு வந்தனர்.இந்நிலையில் தங்களுக்கு மீனை ஏலம் விட்டு விற்பனை செய்ய ஏலக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகிலுள்ள புராதானமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த மாதம் 4-ம்தேதி தூக்குபாலத்தின் கிர்டர் பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. பின் பாலம் பலமிழருந்திருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, கடந்த 30 நாட்களாக இந்தப்பாலத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதனிடையே 30 நாட்களுக்குப்பிறகு கப்பல்களுக்கு வழிவிடும் தூக்குபாலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அதன் அடிபாகத்தில் பழுதுகளை சீரமைக்கும்பணி நடைபெற்றது.
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கமுதியை அடுத்த திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியாமல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி சிவகாசியில் ரத்த தானம் செய்துள்ளார். அந்த எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கும், எச்.ஐ.வி தொற்று பரவியது. இந்த தகவலை அறிந்து, மன உளைச்சலுடன் இருந்த அந்த இளைஞர், சில […]
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவு அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து தமிழக மீனவர்கள் கரைத்திரும்பினர்.இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு மீனவர்களின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, வேனில் கொண்டுவரப்பட்ட ஆயிரம் மதுபாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுபானக்கடைகள் அகற்றப்பட்டன. அதிலிருந்து, பல இடங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவருவதாக புகார் உள்ளது. இதனை அடுத்து, துறைமுக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கிய போது, வேன் டிரைவர் தப்பி ஓடியுள்ளார். அவர் ஓட்டி வந்த வேனை சோதனையிட்டதில், அட்டைப்பெட்டிகளில் 1000 மது […]
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுநேர தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பெய்த பருவமழை காரணமாக விவசாயிகள் தங்கள் பணிகளைத் தொடங்கினார். இந்நிலையில் பயிர்கள் விளையும் தருணத்தில் போதிய மழை இல்லாததாலும், ஆர்.எஸ்.மங்கலம் […]
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று கடலுக்கு சென்றனர். 570 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மிகுந்த எதிர்பார்ப்போடு புறப்பட்டு சென்றனர். இதில், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்து […]
புயல் அறிவிப்பு காரணமாக கடந்த 7 நாட்களாக கடலுக்குள் செல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானதைஅடுத்து கடந்த 12ஆம் தேதி ராமேஸ்வரத்தில் புயல்அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஆந்திர கரையோரம் புயல் கரையை கடந்தது. புயல் அறிவிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டத்தையடுத்து ராமேஸ்வரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். கடந்த […]
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காற்றின் சீற்றம் […]