திருச்செந்தூர் அருகே கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் … Read more

திருச்செந்தூரின் நாழிக்கிணறு ஓர் அதிசயம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை  சேர்ந்தவர்களான … Read more

ஐயன் வருவான் ! சாமி சரணம் …

வட்டி குட்டிப் போடும் என்பது போல், குணமும் குட்டிப்போடும். ஒரு குணத்தைத் தொடர்பு கொண்டே அடுத்தடுத்த குணங்களும் அமையும். கொஞ்சம் இரக்க குணம் இருந்துவிட்டால், அடுத்தடுத்த குணங்களும் அந்த இரக்க குணத்துக்கு, ஈகை குணத்துக்கு, கருணை குணத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமையும். இன்னும் இரக்கம் கூடும். மனிதர்கள் மீதான வாஞ்சை அதிகரிக்கும். எல்லோரிடமும் அன்பு வழங்கும். எதிர்பார்ப்பில்லாமல் பிரியம் காட்டும். அடுத்தவருக்கு சின்னதான துக்கமென்றாலும் துடித்துப் போகும் மனம் கொண்டதாக குணம் இருக்கும். இரக்கம்… இப்படியான குணங்களை … Read more

திருப்தியில் ஆதார் எண் இருந்தால் இலவச தரிசனம் !தேவஸ்தானம் முடிவு …

ஆதார் எண் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் – புதிய திட்டத்தை அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

அரியும் சிவனும் சேர்ந்த அவதாரம் ஐயப்பன் : மணிகண்டன் வரலாறு

மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது … Read more

திருப்தியில் லட்டு விலை உயர்வு !

திருமலை கோயில் அல்லாத, தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்வு. பெரிய ரக லட்டு ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்வு, சிறிய ரக லட்டு ரூ.25லிருந்து ரூ.50 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.

திருவண்ணமலை தீபத்திருவிழா!இந்த ஆண்டு 2500 பக்தர்கள் மட்டும்?

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு மலை ஏற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் …

கார்த்திகை என்றாலே திருவண்ணாமலை என்று அனைவர்க்கும் ஞாபகம் வரும். கார்த்திகைக்கு சிறப்பு நிறைத்த  திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் திருகோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.இந்த திருவிழாவை காண பல்வேறு நாடுகளில் இருந்த பல லட்சம் மக்கள் வந்திருந்தனர்.ஸ்ரீ அருணசலேஷ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

பாற்கடலில் கிடைத்த முக்கிய பொருள் துளசி

மும்மூர்த்திகளில் ஒருவராக வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவர்தான் காக்கும் கடவுளாகவும் வணகபடுகிறார். இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுவது இந்த துளசி . அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவர்களின் முக்கிய இடம் துளசிக்குதான் உண்டு. தூய்மையின் மறுஉருவம் துளசி. பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் மகாவிஷ்ணுவுக்கு துளசி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுவே துளசியின் பெருமையைச் சொல்லும்.  துளசிக்கு மரணத்தைக் கூட தள்ளிப்போட … Read more