காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி நாளை பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடத்த கடலூர் மாவட்ட மீனவர்கள் முடிவு.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கட்டிடங்கள் மேற்கூரை பெயர்ந்தும் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டும் இருகின்றன. இதனால் இந்த கூரை எப்போது விழும் என்கிற பயத்துடன் மாணவிகள் இருகின்றனர். மேலும் பள்ளிகளில் அருகிலிருந்து வரும் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் சுமார் 3200 மாணவிகள் பயில்கின்றனர். 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதனை அரசு விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக […]
கடலூர் நகரம் சுப்புராயுலுநகர் டீ கடை அருகே கேட்பாரற்று கிடந்த ₹40000.00 ரூபாய் பணத்தை மீட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFIயின் நகர துணை செயலாளர் S.செந்தமிழ்செல்வன் அவர்கள் மீட்டு திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார். உடன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் R.அமர்நாத்,நகர குழு உறுப்பினர்களான G.சேட்டு,E.அருள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI கடலூர் நகர செயலாளர் D.S.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.