கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும்.

தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.