பேரறிவாளனை விடுவிக்கும் வழக்கு ! ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் – சிபிஐ

பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஆளுநர் சட்டப்படியான முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு விசாரணையை  நவம்பர் 23-ஆம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,பேரறிவாளனை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சி.பி.ஐ.க்கும் எந்த தொடர்பும் இல்லை. பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

1 hour ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

2 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

3 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago