சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்

  • தமிழகத்தில்  இரண்டாம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில்  இரண்டாம் கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 -ஆம் தேதி தேர்தல் நடைபெற  உள்ள அதே தேதியில் தான் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.இந்த விழாவில் வருடா வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில் பதில் அளித்த தேர்தல் ஆணையம்,தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.மேலும்  தமிழக அரசின் முடிவை கேட்ட பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே இரவு 8 மணி வரை  கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும்.மேலும் கிறித்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் மதுரை சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்தி வைக்கக்கோரிய வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Comment