#BREAKING: போலீசாரை மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு..!

  • சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
  • அப்போது, பெண் ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசியதால் அவர் மீது  6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தபப்ட்டுள்ளது. அவசரம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவையில்லாமல்  வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண்களை போலீசார் விசாரித்தனர். அதில் ஒருவர் போலீசாரை ஒருமையில் பேசத்தொடங்கினார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எனக் கூறி ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை மிரட்டியதாக மீது புகார் கொடுக்கப்பட்டது.

கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

author avatar
murugan